இஸ்ரேல் தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் படைத்தளபதி கொல்லப்பட்டார்; இஸ்ரேல் அறிவிப்பு.!islamic commandar rafah Killed by Israel forces 


கடந்த 2023 அக்.07 ம் தேதி இஸ்ரேல் நாட்டை எதிர்த்து, பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த ஹமாஸ் குழுவினர் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ராக்கெட் ஏவப்பட்டது. எல்லைதாண்டி இஸ்ரேல் நாட்டுக்குள் சென்ற ஹமாஸ், இஸ்ரேலியர்கள் 1400 பேரை கொடூரமாக கொலை செய்தது.

பதிலடியாக தொடரும் போர்:

அதனைத்தொடர்ந்து போரில் களமிறங்கிய இஸ்ரேல், தற்போது ஈவுஇரக்கமின்றி 35 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை கொலை செய்தது. பாலஸ்தீனிய நகரங்கள் முழுவதும் அழிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஹமாஸ் குழுவை சேர்ந்த நபர்களும் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அக்.07 அன்று நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்லாமிக் ஜிஹாத் கமாண்டர் ரஃபிக் பிரிகேட் கொலை செய்யப்ட்டுள்ளார். இந்த தகவலை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

பதற்றத்தை தந்த போர்:

இந்த போரினால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் செயல்படுகின்றன. பாலஸ்தீனியத்திற்கு ஆதரவாக ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளும், அங்குள்ள அமைப்புகளும் உதவுகின்றன.