அந்தரங்க உறுப்பில் சிகிரெட்டால் சூடுவைத்து கொடுமை செய்த மனைவி; கேடி மனைவியால் கதறிய கணவன்.!Uttar Pradesh Wife arrest by police burns husband private Part 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸோஹரா மாவட்டம், சாக் மத்டூத் கிராமத்தில் வசித்து வருபவர் மன்னன் ஜைடி. இவரின் மனைவி மெஹர் ஜஹான். இவர் அங்குள்ள சபியாபாத் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தம்பதிகளுக்கு கடந்த நவம்பர் 17, 2023 அன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

புதிய வாழ்க்கையை தொடங்கிய நபர்:

திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவி சில நாட்களே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அதன்பின் பெண்மணி அவரின் தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார். கணவரும் தனது மனைவியுடன் அங்கேயே தங்கி இருந்துள்ளார்.

அதிர்ச்சி தந்த மனைவியின் செயல்:

இதனிடையே, மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த மெஹர், தனது கணவரை சித்ரவதை செய்ய தொடங்கியுள்ளார். கட்டிய மனைவியாயிற்றே என கணவரும் சித்திரவதையை பொறுத்து வந்துள்ளார்.

ஆணுறுப்பில் சூடு, அறுக்கவும் முயற்சி: 

ஒருகட்டத்தில் பெண்மணி தனது கணவரை கட்டிப்போட்டு, அவரின் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். மேலும், அந்தரங்க உறுப்பை துண்டிக்க முயற்சித்து, அதிலும் சிகிரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். அப்பாவிபோல சிக்கிய கணவன் எதையும் கூறாமல் இருக்க, ஒருநாள் அவரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன செய்வதறியாது திகைத்துள்ளார். 

உயிருக்கு பாதகம் நேர்ந்ததால் உண்மையை கண்ணீராக கக்கிய நபர்:

இதனிடையே, ஏப்ரல் 29 ம் தேதி பெண்மணி தனது கணவருக்கு குடிக்க கொடுத்த பாலில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுப்பொருளை சேர்த்துள்ளார். இதனால் கணவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

அங்கு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தனக்கு நடந்த துயரங்களை விவரித்த நபர், மனைவியின் கொடூர செயலை மறைமுக கேமிரா மூலமாக படம்பிடித்து வைத்திருந்த காட்சிகளையும் கொடுத்துள்ளார். இந்த ஆதாரங்களின் பேரில் மெஹருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.