தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கணவரை பிரிந்து வாழ்ந்து குழந்தைப்பேறு.. அவமானத்தால் பிறந்த குழந்தையை குடும்பமே கொலை செய்த சோகம்?.. நடந்த பயங்கரம்.!
வலங்கைமானில் பெண்மணி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், நட்பு உறவால் கருத்தரித்து குழந்தையை பெற்று அதனை கொலை செய்த சோகம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் வேடம்பூர் தோப்புதெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதிகளுக்கு ரேணுகா என்ற 33 வயது மகளும், ரேகா என்ற 30 வயது மகளும், மணிகண்டன் என்ற 20 வயது மகனும், சினேகா என்ற 18 வயது மகளும் உள்ளனர்.
மூத்த மகள் ரேணுகாவிற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவருடன் கடந்த 12 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்ற முடிந்துள்ளது. ரேணுகா முத்து தம்பதிக்கு 11 வயதுடைய இரட்டை ஆண் குழந்தைகள், எட்டு வயதுடைய பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
ரேணுகாவின் கணவர் 7 வருடமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து விட்டு திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ரேணுகா மூன்று குழந்தைகளுடன் தனது தாய் - தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில், குடவாசலில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி குடும்பச் செலவுகளை கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கல்பனாவிற்கும் - கமலேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் உறவு வைத்துக் கொண்டது நிலையில், அதனால் ரேணுகா அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். கடந்த 22 ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் ஆண் குழந்தையும் பெற்றெடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தவர் தனது குழந்தையை வீட்டின் கொள்ளை புறத்தில் புதைத்து விட்டதாக தெரியவருகிறது. இந்த விஷயம் உள்ளூர் மக்களுக்கு அரசல் புரசலாக தெரியவரவே, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.