தலைமை செயலகத்திலேயே அரசு ஊழியர் என நடித்து பட்டப்பகலில் மோசடி.. சுதாரித்த பெண்ணால் சிக்கிய கயவன்.!

தலைமை செயலகத்திலேயே அரசு ஊழியர் என நடித்து பட்டப்பகலில் மோசடி.. சுதாரித்த பெண்ணால் சிக்கிய கயவன்.!


Thiruvallur Woman Cheated by Fake Govt Officer Police Arrest Culprit

திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சங்கீதா (வயது 31). இவர், சென்னையில் உள்ள பெரியமேடு பகுதியில் ஆதரவற்றோருக்கான இல்லத்தை வைத்து நடத்தி வருகிறார். இந்த இல்லத்திற்கு அரசின் அனுமதி கேட்டும் விண்ணப்பித்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக அரசு அதிகாரிகளை சந்திக்க சென்னை தலைமை செயலகத்திற்கு சங்கீதா சென்ற போது, முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் அருகே நின்றவர், சங்கீதாவிடம் தன்னை தலைமை செயலக ஊழியர் என அறிமுகம் செய்துள்ளார். 

மேலும், அவர் எதற்காக வந்துள்ளார்? என்ற விபரத்தை கேட்டறிந்து, ஆதரவற்றோர் இல்லம் நடத்த ரூ.1 இலட்சம் செலவாகும், முன்பணமாக ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய சங்கீதாவும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். 

thiruvallur

பணத்தை பெற்றுக்கொண்டவர் அரசின் அனுமதியை பெற்றுத்தராத நிலையில், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்மணி பணம் வாங்கியவரை பிடித்து பெரியமேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். 

இந்த விஷயம் தொடர்பான வழக்கை கோட்டை காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் மாற்றிய நிலையில், மோசடியில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 51) என்பதும், கொரோனா நோய்தடுப்பு பிரிவில் தற்காலிக ஊழியராக முன்னதாக பணியாற்றியதும் அம்பலமானது. ஜெயக்குமாரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.