குடிபோதையில் தகராறு செய்த கணவன் கொலை; தலையணை வைத்து அழுத்தி மனைவி பகீர் செயல்.!



Thiruvallur Wife Killed Husband 

 

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எல்லாபுரம், வெங்கல், வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 30). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

இவரின் மனைவி தங்கலட்சுமி (வயது 27). தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 11 ஆம் தேதி ரமேஷ் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெங்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 

ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மூச்சு திணறல் காரணமாக ரமேஷ் உயிரிழந்ததாக தடவியல் மற்றும் பிரேத பரிசோதனை ஆய்வில் தெரியவந்துள்ளது. 

விசாரணையில், ரமேஷை மனைவி தங்கலட்சுமி கணவரை தலையணை கொண்டு அழுத்தி கொலை செய்தது தெரியவந்தது. குடிபோதையில் கணவர் தினமும் தகராறு செய்து வந்த நிலையில், சம்பவத்தன்றும் தகராறு நடந்துள்ளது. 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், உறங்கிக்கொண்டு இருந்த கணவரை தலையணை கொண்டு அழுத்தி தங்கலட்சுமி கொலை செய்தது உறுதியானது. விசாரணைக்கு பின்னர் தங்கலட்சுமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.