தாயின் கண்முன் 20 வயது இளைஞர் மூவர் கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை; நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.!Thiruvallur Thiruverkadu Youth Killed 

 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 20). இன்று நள்ளிரவு இவர் தனது வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார். 

அச்சமயம் வீட்டிற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர்கள், விஜயகாந்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். 3 இளைஞர்களால், விஜயகாந்த் அவரின் தாய் சத்யா கண்முன்னே கொடூரமாக கொல்லப்பட்டார். 

தனது மகனை காப்பாற்ற முயன்ற சத்யாவின் கைகளிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருவேற்காடு காவல் துறையினர், விஜயகாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர். இவர்கள் கைதான பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.