வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
காதலிக்க சொல்லி பள்ளி மாணவியிடம் தொந்தரவு., நடுரோட்டில் கலவரம் செய்த காமுகன்.. பரபரப்பு சம்பவம்.!
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, சயனாவரம் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் பஞ்செட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி தனது வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு தினமும் நடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், இதே பகுதியை சேர்ந்தவன் ரகு (வயது 23). இவன் சிறுமியை பின்தொடர்ந்து என்று தன்னை காதலிக்கும் படி வற்பறுத்தி வந்துள்ளான். இதனை ஏற்றுக்கொள்ளாத சிறுமி சுதாரிப்புடன் தவிர்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மாணவியை பின்தொடர்ந்து சென்ற ரகு, மீண்டும் காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்துள்ளான். இதனால் அவர் ஏற்க மறுத்தால், அவனது கை - கால்களை தானே வெட்டிக்கொண்டு மிரட்டி இருக்கிறான்.
இதனையடுத்து, சிறுமி தகவலை பெற்றோரிடம் தெரியப்படுத்தவே, அவர்கள் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரகுவை கைது செய்தனர். அவனின் மீது போக்ஸோ உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.