"அந்த மாதிரி படத்தில் நடித்த பிறகு வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் அழுதேன்" மனம் திறந்த சதா.!
குடும்பத்தை பிரிந்த கள்ளகாதலியும், குடும்பத்துக்காக ஏங்கிய கள்ளகாதலனும்... இறுதியில் நடந்த மரணம்.. நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!
குடும்பத்தை பிரிந்த கள்ளகாதலியும், குடும்பத்துக்காக ஏங்கிய கள்ளகாதலனும்... இறுதியில் நடந்த மரணம்.. நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!

தனது கள்ளகாதலுக்காக பெண்மணி குடும்பத்தை பிரித்து வந்துவிட, கள்ளக்காதலன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ஏங்கி சண்டையிட்டதால் கள்ளக்காதலி தூக்கிட்டு தற்கொலை செய்தார். கண்கலங்காமல் வைத்து பார்த்துக்கொண்டு கணவன், குழந்தைகளை உதறித்தள்ளிவிட்டு வந்த பெண்மணியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம், எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 36). இவர் தனியார் பேருந்து ஓட்டுநர் ஆவார். பாபுவின் மனைவி அமுதா (வயது 30). இதே பகுதியை சேர்ந்தவர் ஜோதிஸ்வரன் (வயது 23). அமுதாவுக்கும் - ஜோதிஸ்வரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் இருவருக்குள்ளும் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, அமுதா - ஜோதிஸ்வரன் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இருவரும் ஒருகட்டத்தில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் பாபு தனது மனைவியை குடும்பத்தார் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி குடும்பம் நடத்த வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பாபுவுடன் வாழ விருப்பம் இல்லாத அமுதா மீண்டும் கள்ளக்காதலனுடன் சென்றுள்ளார்.
இவர்களின் கள்ளக்காதலுக்கு உடந்தையாக சோழவரம் பெருமாள் கோவிலை சேர்ந்த சிவப்ரகாஷ் (வயது 23) என்பவர் இருந்து வந்துள்ளார். கடந்த சில மாதமாக பெரியகுப்பம் கம்பர் தெருவில் கள்ளக்காதல் ஜோடி கணவன் - மனைவியாக வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதியில் வீட்டருகே துர்நாற்றம் வந்துள்ளது. காவல் துறையினர் அமுதாவின் சடலத்தை மீட்ட நிலையில், தலைமறைவான கள்ளக்காதலன் மற்றும் சிவப்ரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.
விசாரணையில், ஜோதிஸ்வரன் - அமுதா இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் வயப்பட்டு இருந்து வந்துள்ளனர். இவர்களின் இல்லற வாழ்க்கை கசந்தாலும், ஜோதிஸ்வரனுக்கு திருமணமாகி குழந்தை பிறந்தாலும் அவர்களுடன் நான் வாழ செல்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத அமுதா, எனது கணவன் மற்றும் பிள்ளைகளை துறந்து உன்னுடன் வந்தேன். நீயும் உனது குடும்பத்தை பிரிந்து வா என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஒருகட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த ஜோதிஸ்வரன் அமுதாவை தரக்குறைவாக பேசியுள்ளார். இதன்பின்னரே அமுதா தற்கொலை செய்துகொண்ட நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விசாரணையை நிறைவு செய்த காவல் துறையினர் அமுதாவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி ஜோதிஸ்வரன் மற்றும் சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.