தமிழகம்

பதறவைக்கும் விபத்து.. உருகுலைந்துபோன குடும்பம்.. 7 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..

Summary:

திருப்பூரில் நடந்த கொடூர விபத்தில் 7 வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக

திருப்பூரில் நடந்த கொடூர விபத்தில் 7 வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வல்லக் குண்டாபுரத்தை சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவர் அவரது மனைவி சரண்யா மற்றும் மகள் தனியா(வயது 7) ஆகியோருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அவர்களுக்கு பின்னால் மற்றொரு காரும் வந்துகொண்டிருந்தது.

இந்த இரண்டு கார்களும் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது, திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்த லாரி ஒன்று நிலைதடுமாறி எதிரே வந்த அந்த இரண்டு கார்கள் மீதும் மோதியுள்ளது. இதில் கார்த்திக்கேயன் ஓட்டிவந்த கார் லாரியின் முன்பக்கம் உள்ளே சென்று, கார் மீது லாரி ஏறி நின்றது.

image

இதில் கார் உருகுலைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர், லாரிக்கு அடியில் சிக்கியிருந்த காரை மீட்டனர். இதில் கார்த்திகேயன் அவரது மனைவி மற்றும் மகள் தனியா மூவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துகிடந்தனர். மற்றொரு காரில் வந்த மூன்று பேர் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், லாரியை ஓட்டிவந்த கதிரவன் என்பவனை கைது செய்து விசாரித்துவருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டிவந்த கதிரவன் குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடிபோதை ஓட்டுனரால் ஒரு குடும்பமே உருகுலைந்து போன சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement