திருப்பூரில் பயங்கரம்: பட்டப்பகலில் வெட்டிக்கொலை; துண்டு பிரசுரம் வீசி சென்ற மர்ம நபரால் பெரும் பரபரப்பு.!

திருப்பூரில் பயங்கரம்: பட்டப்பகலில் வெட்டிக்கொலை; துண்டு பிரசுரம் வீசி சென்ற மர்ம நபரால் பெரும் பரபரப்பு.!


thiruppoor main road murder - in many people see

திருப்பூரில் பட்டப்பகலில் ஜோதிடர் ஒருவர் ஹெல்மெட் அணிந்த மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தப்பித்துச் செல்லும்போது சில துண்டு பிரசுரங்களையும்  விட்டுச் சென்றுள்ளார்.

திருப்பூரில் ரமேஷ் என்ற ஜோதிடர் மரத்தடியில் அமர்ந்து ஜோசியம் பார்க்கும் தொழில் புரிந்துள்ளார். இந்நிலையில் இன்றும் வழக்கம்போல் குமரன் ரோட்டின் அருகில் பின்னி காம்பவுண்ட் ரோட்டில் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்த நபர் பைக்கில் அவரது அருகில் வந்து பட்டப்பகலிலேயே பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அவர் வெட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் தப்பித்துச் செல்லும்போது சில துண்டு பிரசுரங்களை விட்டுச் சென்றுள்ளார்.

அதில் ரமேஷ் பெண்களை வசியம் செய்து தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகவும் மேலும், அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை நடந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இவ்வாறு திருப்பூரில் மக்கள் அனைவரின் பார்வையில் பட்டப்பகலிலேயே வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது