விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் திடீரென மருத்துவமனையில் அனுமதி... சோகத்தில் தொண்டர்கள்!!
தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் ஆன தொல் திருமாவளவன் திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமாவளவனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை எடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். இச்செய்தி தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் திருமாவளவன் இரண்டு நாள்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய காரணத்தால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வருகின்ற 30 ஆம் தேதி வரை சந்திக்க வர வேண்டாம் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.