தமிழகம்

திருச்சி பூங்காவில் 31 மான்கள் மர்ம மரணம்; சோக சம்பவத்தின் பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary:

thiruchi bell - park - 31deers dead

திருச்சி பெல் நிறுவனத்திற்கு சொந்தமான பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மான்களில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 31 மான்கள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ளது மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பூங்காவில் பலவகை உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது அதில் சுமார் 200 மான்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 31 ஆண்கள் மான்கள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட வனத்துறை அதிகாரி வனஜா தலைமையிலான மருத்துவக் குழுவினர் உயிரிழந்த மான்களை பரிசோதனை செய்து முதல் கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில் சுபா என்னும் புல்வகையை மான்கள் அதிகமாக உட்கொண்டதால் செரிமான கோளாறு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தற்போது நலமாக உள்ளம் மான்களுக்கு செரிமானக்கோளாறு ஏற்படாமல் இருக்க அருகம்புல், கீரை, காய்கறிகளுடன் மிளகு சேர்த்து கொடுக்கப்பட்டு வருகிறது.
 


Advertisement