அதுக்குள்ள இப்படியா நடக்கணும்! ராமேஸ்வரத்திற்கு காரில் வந்த குடும்பம்! ஹோட்டல் அருகே நின்ற கார்! சாப்பிட்டு வந்தவர்களுக்கு காரில் காத்திருந்த பேரதிர்ச்சி!



theft-near-hotel-in-rameswaram-during-amavasai

ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரபல ஆன்மீக சுற்றுலா தலம் ராமேஸ்வரம் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித தர்ப்பண நிகழ்வுகளால் களைகட்டியது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

அந்த வகையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் ராமேஸ்வரத்தில் உள்ள புறநகர ஹோட்டல் அருகே காரை நிறுத்தி, சாப்பிட ஹோட்டலுக்கு சென்றனர். பின்னர் திரும்பி வந்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, காரில் இருந்த பை மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.

அந்த பையில் 5 தங்க மோதிரம், வைர மோதிரம், ரூ.10,000 பணம், மற்றும் செல்போன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: அதிர்ச்சி! கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆணின் உடல்! உடல் பாகங்கள் சில காணவில்லை! சிவகங்கையில் பரபரப்பு...

ராமேஸ்வரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து, மர்ம நபர்களை கண்டறியும் விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

 

இதையும் படிங்க: யூடியூப் டயட் வீடியோ பார்த்து உடல் எடை குறைக்க முயன்ற 2 இளம் உயிர்கள் பலி ! மருத்துவர்கள் எச்சரிக்கை...