யூடியூப் டயட் வீடியோ பார்த்து உடல் எடை குறைக்க முயன்ற 2 இளம் உயிர்கள் பலி ! மருத்துவர்கள் எச்சரிக்கை...



youtube-diet-tamil-student-death-warning

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன், உடல் எடையை குறைக்க YouTube வீடியோக்களை பார்த்து முறையற்ற உணவுக் கட்டுப்பாடு மற்றும் தவறான உடற்பயிற்சி முறைகள் பின்பற்றியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக உணவுகளை தவிர்த்து, பழச்சாறு மட்டும் குடித்து வந்ததாக தகவல்.

இதேபோன்று, கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஸ்ரீநந்தா, யூடியூப் வழியாக அதிரடியான டயட் திட்டங்களை பின்பற்றி Anorexia Nervosa எனப்படும் உணவுக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் ஆறு மாதங்களாக உணவினை குறைத்து, கடைசி இரண்டு மாதங்களாக வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து வந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கையுடன் கூறுவதாவது – "உடல் எடையை குறைப்பதற்காக மருத்துவ ஆலோசனை இல்லாமல் யூடியூப் போன்ற இணையதளங்களில் காணப்படும் தகவல்களை நம்பி தவறான வழிகளை பின்பற்றுவது உடல் நலத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுத்தும்."

இதையும் படிங்க: அதிர்ச்சி! சிகரெட்டை விட ஊதுபத்தி புகையால் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகம்! ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

உடல் எடையை குறைக்க விரும்பும் அனைத்து வயதினருமும், தங்களின் உடல் நிலை, வயதுக்கேற்ப மருத்துவர் பரிந்துரை செய்த அளவான உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இச்சம்பவங்களின் முக்கிய பாடமாகும்.

 

 

இதையும் படிங்க: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பில் சிறிய மாற்றம் ! அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!