நாங்கள் குடித்தது 150 ரூபாய்.. நீங்கள் போடுவதோ 20,000 ரூபாய்..! "இதெல்லாம் ரொம்ப அநியாயம் கோ" - புலம்பிதவித்த குடிமகன்..!the-young-man-who-drove-drunk

குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்த இளைஞருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் போட்ட காவல்துறையினரின் செயலை போதை இளைஞர் கண்டித்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் புது வண்ணாரப்பேட்டையில் குடித்துவிட்டு, வண்டி ஓட்டி வந்த இளைஞர்களை போலீசார் வழிமறித்து அவர்களுக்கு அபராதம் போட்டுள்ளனர்.

அதற்கு ஒரு இளைஞர் "நான் குடித்ததோ 150 ரூபாய்க்கு தான். ஆனால் நீங்கள் அபராதம் போடுவதோ 20000 ரூபாய்க்கு, இவ்வளவு பணத்தை நாங்கள் எங்கிருந்து கட்டுவோம்.

காவல் துறை நடவடிக்கை

 நாங்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், பணக்காரர்கள் யாரும் கிடையாது, எங்களிடம் இவ்வளவு அபராதம் போட்டால் நாங்கள் எப்படி கட்டுவது?, இதெல்லாம் ரொம்ப அநியாயம், மக்களே எல்லாரும் பார்த்துக்கோங்க என்று அந்த இளைஞர்கள் போதையுடன் கொண்ட மனவேதனையில் தெரிவித்துள்ளார்.