தமிழகம்

பேருந்து பயணத்தின் போது உயிரிழந்த பாட்டி! பின்னர் நேர்ந்த மனசாட்சியற்ற கொடூர செயல்!

Summary:

the unhearted people throw rhe body of old women

வேலூர் மாவட்டம்  காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து 60 வயது மூதாட்டி ஒருவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது இதில் அவர் பேருந்தில் உள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் இதுகுறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் மூதாட்டியுடன் யாரும் வரவில்லை தனியாகவே வந்துள்ளார் என்பதை அறிந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தி இறந்த மூதாட்டியின் உடலை சாலையின் ஒரு ஓரத்தில் வைத்து, அவரது பையிலிருந்த சால்வை ஒன்றை எடுத்து மூடிவிட்டு சென்றுள்ளனர்.

தொடர்புடைய படம்

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 பின்னர் அவரைக் குறித்து விசாரணையில் ஈடுபட்ட அவர்கள் அந்த மூதாட்டி செய்யாறு பகுதியைச் சேர்ந்த பூசணம் என்றும், அவர் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்பதை அறிந்தனர்.

இதனையடுத்து அவருடைய மகன் மஞ்சுநாத் என்பவருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து உடலை ஒப்படைத்துள்ளனர்.

இறந்த மூதாட்டியின் உடலை நடுரோட்டில் வைத்துச் சென்ற பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் சக பயணிகளின் மனசாட்சியற்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement