ரூ.5 முதல் 55 வரை கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்!!.. மலைக்க வைக்கும் சுங்கக்கட்டணம்..!!

ரூ.5 முதல் 55 வரை கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்!!.. மலைக்க வைக்கும் சுங்கக்கட்டணம்..!!



The toll hike in 29 toll booths in Tamil Nadu will come into effect from today.

தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடி கட்டணங்கள் வருடந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் (2022-23) நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரையில் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள்  ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதன் படி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 55 சுங்கச்சாவடிகள் இயங்கிவரும் நிலையில், 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தெரியவந்துள்ளது. ரூ.5 முதல் ரூ.55 வரை வாகனங்களின் வகைக்கு ஏற்ப கட்டணம் உயரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த கட்டண உயர்வின் காரணமாக சென்னையில் இருந்து மதுரை, கோவை போன்ற ஊர்களுக்கும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்யும் போது கூடுதல் செலவு ஏற்படும். இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.