அட பாவி மனுஷா... அண்ணன் மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்.! அதிர்ச்சி சம்பவம்.!



The teacher who sexually abused his brothers daughter

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது. 

இந்தநிலையில் அண்ணன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னிமலை, தெற்கு ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் என்பவர் அதாவது அந்த சிறுமியின் சித்தப்பா அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

மாணிக்கத்திற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இவரது குழந்தையை அவரது அண்ணன் மகள் அதாவது 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அடிக்கடி தன் வீட்டுக்கு அழைத்துச்செல்வதும் பின்னர் மாணிக்கம் வந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துச்செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
 
இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக இருந்த மாணவியை, மாணிக்கம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கொடுத்த புகாரின் பேரில்  போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.