தமிழகம் மருத்துவம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதில் கெத்து காட்டிய தமிழகம்.! தமிழகத்தை பாராட்டிய மத்திய அமைச்சர்.!

Summary:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என உலக சுகாதார அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை நேரில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 17 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் போலியா தடுப்பூசி போடும் பணி நடைபெறும். போலியோவை விரட்டியது போல கொரோனாவையும் விரட்டுவோம் என தெரிவித்துள்ளார்.


Advertisement