
மில்லில் லவ்விய கள்ளக்காதல்.. ஓனருக்கு தெரியவந்ததால் தூக்கில் தொங்கிய மேனேஜர்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி கிராமத்தில் வசித்து வந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி தனியார் ஆயில் மில்லில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
ஆயில் மில்லில் 5 வருடமாக ரவிச்சந்திரன் மேலாளர் பொறுப்பில் பணியாற்றி வந்த நிலையில், மில்லில் பணியாற்றும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் மிலின் உரிமையாளர் அலாவுதீனுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கடந்த 14 ஆம் தேதி அலாவுதீன் ரவிச்சந்திரனை கண்டித்த நிலையில், மனமுடைந்துபோன ரவிச்சந்திரன் மில் அலுவலகத்தில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக மில் ஊழியர்கள் ஆலங்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ராமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement