தமிழகத்தின் 2-வது தலைநகர் மதுரையா? திருச்சியா? அமைச்சார்கள் வலியுறுத்தல்.! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த விளக்கம்!thamilnadu cm talk about second capital

தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகராக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். 

ஆசியாவிலேயே சிறந்த ரயில் போக்குவரத்து, தொழிற்சாலைகள், எல்லா நிலையிலும் தண்ணீர் பஞ்சமே இல்லாத மாவட்டம் திருச்சி மாவட்டம். இதனால் தான் எம்.ஜி.ஆர் திருச்சியை தலைநகர் ஆக்க வேண்டும் என விரும்பினார். அதேபோல் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசர் திருச்சியை 2-வது தலைநகராக்க கோரிக்கை எழுப்பியுள்ளார்.

trichy

இதனையடுத்து தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் குறித்த விவகாரம் விவாதப் பொருளானது. இந்தநிலையில், வட மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் அமைப்பது என்பது அமைச்சர்களின் கருத்து. அது தமிழக அரசின் கருத்தல்ல என்று விளக்கமளித்தார்.