தமிழகத்தில் முக்கிய அரசியல்வாதியின் உடல்நிலை கவலைக்கிடம்.!

தமிழகத்தில் முக்கிய அரசியல்வாதியின் உடல்நிலை கவலைக்கிடம்.!tha-pandiyan-health-condition-critical

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில், அவரது உடல்நிலையை கவனித்து வருகிறார்கள். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று தா.பாண்டியனுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

tha pandian

சிறுநீரக பிரச்சினையால் கடந்த 10 ஆண்டுகளாக அவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில், தா.பாண்டியனின் உடல்நிலை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.