பயங்கரம்.. திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. சம்பவ இடத்திலேயே பலியான கணவன் மனைவி..!



Terrible.. Tragedy happened to those who went to the wedding ceremony.. Husband and wife died on the spot..!

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பகுதியில் வசித்து வருபவர் பிச்சை. இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவிந்தராஜிற்க்கும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒன்றரை வயதில் சுகாசினி என்ற குழந்தை உள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தராஜ் தனது மனைவியுடன் திருச்சி மாவட்டம் பண்ணக்காரன்பட்டியில்  நடக்க இருந்த உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இவர்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

accident

இந்தக் கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கோவிந்தராஜ் மற்றும் ரேணுகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்தில் சிக்கி கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.