அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கணக்கில் இல்லாத 2 லட்சம் வாக்குகள்... மே 4-ல் நடக்கப்போகும் மெகா சம்பவம்! தமிழக தேர்தல் களத்தில் புதிய பரபரப்பு .!!!
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தபால் வாக்குகள் குறித்து எழுந்துள்ள குழப்பம் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் காணப்படும் வேறுபாடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் விளக்கம் கோருகின்றன.
தபால் வாக்கு எண்ணிக்கையில் முரண்பாடு
தகவலின்படி, மாநிலம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற தயாராக உள்ளது. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் 8:30 மணிக்கு மின்னணு வாக்குகள் கணக்கிடப்பட உள்ளன. ஆனால் மொத்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தெளிவின்மை நிலவுகிறது.
இதையும் படிங்க: BREAKING : ஐந்து மாநிலத் தேர்தல்....மே 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள்! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!!!
தேர்தல் பணியில் ஈடுபட்ட 3.60 லட்சம் அரசு ஊழியர்களில் 2.88 லட்சம் பேர் வாக்களித்ததாகவும், காவல்துறை மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளின் 3.36 லட்சம் வாக்குகளும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் 1.73 லட்சம் வாக்குகளும் சேர்த்து கணக்கிட்டால் 8 லட்சத்தை தாண்ட வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக 6.37 லட்சம் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கில் ஏற்பட்ட இடைவெளியே தற்போது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
அரசியல் கட்சிகளின் எதிர்வினை
இதையடுத்து பல்வேறு கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு வருகின்றன. குறிப்பாக கடும் போட்டி நிலவும் தொகுதிகளில், இந்த தேர்தல் முடிவுகள் மீது தபால் வாக்குகள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. எனவே, எந்த தவறும் இல்லையென உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மே 4-ஐ நோக்கிய எதிர்பார்ப்பு
ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 85 சதவீதம் பதிவாகியதாக கூறப்படுகிறது. புதிய வாக்காளர்கள், பெண்களின் பங்கேற்பு அதிகரித்திருப்பது முடிவுகளை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடும் நிலையில், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நிலவும் குழப்பங்களுக்கு தீர்வு காண, இறுதி முடிவுகள் வெளியாகும் மே 4-ஆம் தேதியே முக்கிய நாளாகக் கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: மே 4-ல் தரமான சம்பவம் இருக்கு! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் தவெக! பனையூரில் நடந்த ரகசிய மீட்டிங்!!!