
ted exam announced
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் தேர்வுகளுக்கான டெட் தேர்வு ஜூன் மாதம் 27,28 ஆம் தேதி நடைபெற உள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 956 இடங்களுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 97 காலியிடங்கள் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் பணிக்கான தேர்வு வருகின்ற பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
முதுகலை ஆசிரியர் தேர்வு, இடைநிலை ஆசிரியர் பணியிடம், தொடக்க பள்ளி ஆசிரியர் பணி ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தை அணுகலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
Advertisement
Advertisement