BREAKING : இன்று தமிழகத்தில் இணையதள சேவைகள் இயங்காது! மின்வாரியம் அறிவிப்பு..!!!
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளால், இன்று (மே 28) நாள் முழுவதும் மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து TANGEDCO அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உயரழுத்த மின்நுகர்வோருக்கான பில்லிங் சேவை மற்றும் தரவுத்தள அமைப்பை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், இணையதள சேவைகளில் இந்த தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா.? வருகிறது புதிய ரூல்ஸ்.. தயாரா இருங்க.!
ஆன்லைன் சேவைகள் பாதிப்பு
இணையதளம் செயல்படாததால், பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட சில முக்கிய சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இணையதளத்தை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், மின்வாரியம் தொடர்பான சில டிஜிட்டல் சேவைகளும் இன்று முழுவதும் கிடைக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணிகள் முடிந்ததும் சேவை சீராகும்
தகவலின்படி, பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் முடிவடைந்ததும் அனைத்து சேவைகளும் மீண்டும் வழக்கம்போல் இயங்கும் என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இதனால், அவசரமற்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளை பொதுமக்கள் நாளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.