AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
BREAKING : மீண்டும் கனமழை...இந்த 2 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..! சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக வானிலை திடீர் மாற்றம் கொண்டுள்ள நிலையில், மழை எச்சரிக்கை காரணமாக சில முக்கிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் உருவாகியுள்ள தாழ்வு மண்டலத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் மழை வாய்ப்பை அதிகரித்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுக்குறைவு
நேற்று தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வடதமிழகம்–புதுவை கடலோரப் பகுதிகளுக்கு அருகில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்தது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் பலவீனப்படக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு காரணமான வளிமண்டல சுழற்சி
தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை, சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் கனமழை.... இன்று (நவ..25) 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையா?. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் அறிவிப்பு.!
சென்னை மற்றும் திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த வானிலை நிலைமையை முன்னிட்டு, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ளார்.
அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக அரசாங்கம் வழங்கிய இந்த விடுமுறை அறிவிப்பு, வானிலை நிலைமையைப் பொறுத்து மேலும் மாற்றப்படுமா என்பது குறித்து மாநிலம் முழுவதும் மக்கள் கவனத்துடன் இருந்துவருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... இந்த மாவட்டத்தில் நாளை (டிச..2) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு..!