முதல் தவணை கூட தடுப்பூசி செலுத்தவில்லையா?.. வீடு வீடாக 50 இலட்சம் பேருக்கு வலைவீசும் சுகாதாரத்துறை.!

முதல் தவணை கூட தடுப்பூசி செலுத்தவில்லையா?.. வீடு வீடாக 50 இலட்சம் பேருக்கு வலைவீசும் சுகாதாரத்துறை.!


tamilnadu-health-ministry-plan-to-search-50-lakh-person

குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், முதல் தவணையை செலுத்திவிட்டு இரண்டாவது தவணையை செலுத்தாமல் இருப்பவர்கள் என 50 இலட்சம் பேரை வீடு வீடாக சென்று கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கவிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த 2021 ஆம் வருடம் ஜன. 16 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், மருத்துவம் மற்றும் முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன அதனைத்தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

இப்படியாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை கோவிட்ஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், விரைந்து தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய பணிகளும் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் வார இறுதியில் உள்ள சனிக்கிழமையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் வாயிலாக 18 வயதை கடந்த 5 கோடியே 79 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இவர்களில் 5 கோடியே 33 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டன. 

tamilnadu

இவர்களில் 50 இலட்சத்திற்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கும் நிலையில், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவர்களை வீடு வீடாக சென்று அடையாளம் காணும் பணியும் நடக்கின்றன. இந்த விஷயம் தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவிக்கையில், "தற்போது வரை தடுப்பூசி எழுதாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

முதல் தடுப்பூசியை செலுத்திவிட்டு இரண்டாம் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் விரைவில் ஈடுபடவுள்ளார்கள். கொரோனா பரவலின் அடுத்த அலையை தடுக்க தடுப்பூசியே உதவும்" என்று தெரிவித்தனர்.