நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டத்தை துவங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் மருத்துவம் Covid-19

நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டத்தை துவங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று  கொரோனா பரிசோதனை செய்யும் வகையில், "நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டத்தை" மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று துவங்கி வைத்தார்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் பி.ஆர்.என். தோட்டப் பகுதியில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க நவீன ரோபோ வையும், மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்களை கொண்டு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டத்தை
மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று துவங்கி வைத்தார்.   

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸை தடுக்க சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நுண்அளவில் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் நாள்தோறும் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா தொற்றை தடுக்க அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 500 சுகாதார ஆய்வாளர்கள் வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 165 சுகாதார ஆய்வாளர்கள் ராயபுரம் மண்டலத்தில் பணிகளை தொடங்கியுள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo