தமிழகத்தில் 2635 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்!

தமிழகத்தில் 2635 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்!


tamilnadu-coronovirus-statistics

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியாக சந்தேகப்படும் வகையில் இருக்கக்கூடிய 2635 பேர் தனிமைப்படுத்தி கண்கானிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனாவிற்கு எதிராக தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து பதிவிட்டுள்ள அவர், மார்ச் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் 184486 பேருக்கு முதல்கட்ட சோதனை செய்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு வந்தவர்கள்.

Coronovirus

இதில் கொரோனா தொற்று இருக்குமோ என சந்தேகப்படும் அளவிற்கு உள்ள 2635 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு கண்கானிக்கப்படுகின்றனர். 24 பேர் மருத்துவமனைகளில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிபிரிவில் 1120 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவாம்.

இதுவரை தமிழகத்தில் 147 பேருக்கு இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில் 95 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதியாகியுள்ளது. ஒரே ஒரு நபருக்கு மட்டும் தொற்று இருந்து குணமாகியது. இன்னும் 51 பேருக்கு சோதனை முடிவுகள் வரவில்லையாம்.