கொரோனாவை எப்படி ஒழிக்க முடியும்? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
கொரோனாவை எப்படி ஒழிக்க முடியும்? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

சீனாவில் ஆரம்பித்த கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்குதலால் நோய்த்தொற்று பரவுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்களால் தமிழகத்திலும் கொரோனா அதிகரிப்பு அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கொரோனா குறித்து பேசினார். அவர் கூறுகையில், இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிக்கிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வாங்கப்பட உள்ளன. ரேபிட் கருவிகள் வந்தவுடன் கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை செய்யப்படும். அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்கட்டமாக ரூ.500 கோடி மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது.
கொரோனாவை தடுப்பதற்கு சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். பெரும்பாலான இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. கொரோனவை ஒழிப்பது மக்கள் கையிலே உள்ளது. நோய் அறிகுறி தெரிந்தவுடன் உரிய மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.