தமிழகம்

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.! முதல்வர் அறிவிப்பு.

Summary:

Tamilnadu CM announced luck down extended to April 30

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நோயானது தற்போது தமிழகத்திலும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இந்நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை சட்டம் குற்றப்பிரிவு விசாரணை 144-ன் படி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.


Advertisement