ஆசிரியர்களுக்கான அடுத்தடுத்த அதிரடி சலுகைகள்; போராட்டம் கைவிடப்படுமா?

ஆசிரியர்களுக்கான அடுத்தடுத்த அதிரடி சலுகைகள்; போராட்டம் கைவிடப்படுமா?



tamilnadu - jacto jio - government stafs - strike

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு விரும்பும் ஊர்களுக்கு பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது தமிழக அரசு.

கடந்த 22ம் தேதி முதல் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் அரசு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் வெள்ளிக்கிழமை மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளால் மாநிலம் முழுவதும் இதுவரை 450 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அந்த இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டது.

jacto geo

அந்த காலி பணியிடங்களுக்கு தற்சமயம் போராட்டத்தில் ஈடுபடாமல் பள்ளிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளை தேர்வு செய்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு வந்தால் அவர்களும் தங்களுக்கு விருப்பமான ஊர்களுக்கு பணியிட மாறுதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது.