தமிழகம் உலகம்

அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தமிழே உயிர் என நினைக்கும் சிறுவன்! சிறுவன் வெளியிட்ட வீடியோவால் குவிந்து வரும் பாராட்டுக்கள்!

Summary:

tamil young boy shared tamil video in america

வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிகப்படியான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டிலிருந்தும் அதிகபடியான நபர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். பலர் தமிழகத்தில் பிறந்து, அமெரிக்காவிற்கு சென்று 4 வருடங்கள் கழித்து, மறுபடியும் தமிழகம் வரும்போது அவர்களது பேச்சு முற்றிலும் மாறுபட்டிருக்கும். அவர்கள் தமிழ் பேசுவதற்கே சற்று தடுமாறுவார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள், பிறந்ததிலிருந்தே அமெரிக்காவில் இருப்பதால் குடும்ப உறவினர்களிடம் தமிழில் பேசுவதற்கு மிகவும் தயங்குவார்கள்.

 இந்த நிலையில் சென்னையை சேர்ந்த, தினேஷ் என்பவர் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரின் மூத்த மகன் தீக்ஷித் என்ற சிறுவன் ஓவியத்தில் அதிகம் ஆர்வமுள்ளவனாக இருந்துவந்துள்ளான். அமெரிக்காவில் நடந்த ஓவிய போட்டியில் பல பரிசுகளை வென்றுள்ளான். 

ஆனாலும், இந்த சிறுவனுக்கு தமிழ் மீது அதிகம் ஆர்வம் இருந்துள்ளது. இதனால் அந்த சிறுவன் தமிழில் பல கதைகளை வீடியோவாக பதிவு செய்து, அதனை பகிர்ந்து,  அமெரிக்காவில் வாழும் தமிழ் குடும்பங்களை வியக்க வைக்கிறான். அவன் வீடியோவில் கூறும் கதையும், சிறுவனின் ஓவியமும் ஒட்டுமொத்த தமிழர்களையும் பாராட்ட வைக்கிறது. பலரும் அமெரிக்காவில் வாழும் அந்த தமிழ் சிறுவனை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த சிறுவனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement