தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில்... தமிழகம் நான்காவது முறையாக முதல் இடம்...!

தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில்... தமிழகம் நான்காவது முறையாக முதல் இடம்...!



Tamil Nadu ranks first in the national educational institution ranking list for the fourth time.

தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் 163 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சென்னை, தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் ஐ.ஐ.டி கல்வி நிறுவனம் நாலாவது முறையாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.), மாநிலம் முழுவதும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் நான்காவது முறையாக முதல் இடத்தை பெற்றுள்ளது. 

இதேபோல், பல்கலைக்கழகம், கல்லூரி, என்ஜினீயரிங், மேலாண்மை, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம், ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பிரிவுகளிலும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறந்த கல்வி நிறுவனங்களாக வெளியிடப்பட்ட பட்டியலின் அடிப்படையில், எந்தெந்த மாநிலங்களில் அதிக கல்வி நிறுவனங்கள் வருகின்றன என்ற புள்ளிவிவரத்தைக் கொண்டு, மாநிலங்களின் தரவரிசையும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையில் தமிழ்ழகம் 163 கல்வி நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தை 93 கல்வி நிறுவனங்களில் டெல்லியும், மூன்றாவது இடத்தை 88 கல்வி நிறுவனங்களில் மகாராஷ்டிராவும் பிடித்துள்ளது. இதைதொடர்ந்து கர்நாடகா, உத்தரபிரதேசம், பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட், அசாம், ஜார்க்கண்ட், சண்டிகர், இமாசலபிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.