தமிழகம் இந்தியா

சீனா - இந்தியா எல்லை பிரச்சனை.! எல்லையில் குவிக்கப்பட்ட இருக்கும் தமிழக போலீசார்..!

இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் பகுதியில் ஏற்பட்டுவரும் எல்லை பிரச்சனை காரணமாக தற்போது அங்கு இருதரப்புகளும் தங்கள் படைகளை குவித்துள்ளன.

இந்த பரபரப்பான சூழலில் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மாநிலங்களில் உள்ள போலீசாருக்கு உள்துறை அமைச்சகம் சார்பகா அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக போலீசாருக்கும் லடாக் எல்லை பகுதியில் விருப்பத்தின் அடிப்படையில் ஒருமாதகாலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் 6 கிலோமீட்டர் தூரம் ...

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, ஆவடி உள்பட மொத்தம் 15 இடங்களில் போலீஸ் பட்டாலியன் பிரிவு உள்ளது. இந்த படைப்பிரிவுகளில் உள்ளவர்கள் லடாக் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பினால் அவர்கள் தங்களின் விவரங்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


Advertisement