தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்.. 18,023 பேர் பாதிப்பு.. 409 பேர் மரணம்..

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,023 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 18,023 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக 22,74,704 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று மட்டும் 409 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இன்றும் மட்டும் 31,045 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 2,18,595 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நாள்தோறும் 35 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்கள் மத்தியில் சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.