கோடைகாலத்தில் இலவசம்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. முழு விபரம்.!
சிறு, குறு விவசாயிகளுக்கான ஆதரவை அதிகரிக்கும் பொருட்டு, இலவச கோடை உழவுத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் முழு விபரங்களை பார்க்கலாம். தகுதி, நன்மைகள் மற்றும் விண்ணப்ப முறை
விவசாயிகளுக்காக முன்னெடுப்பு:
கொரோனா காலத்தில் விவசாயிகளின் பொருளாதார சுமையை குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய முக்கிய திட்டங்களில் ஒன்றாக இலவச கோடை உழவு திட்டம் திகழ்கிறது. விவசாய நிலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அடுத்தடுத்த சாகுபடிக்கான நிலத்தை தயார் செய்யவும் அவசியமான கோடை உழவை அரசு சார்பில் இலவசமாக செய்து வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. Tamil Nadu Agriculture Department மற்றும் டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான Tractors and Farm Equipment Limited (TAFE) இணைந்து மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை முன்னெடுத்தன.
இதையும் படிங்க: மக்களே... இன்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ. 3, 000 வாங்கிக்கொள்ளலாம்! கால அவகாசம் நீட்டிப்பு! உடனே கிளம்புங்க...!
சத்து மேம்படும்:
விவசாயத்தில் மண்ணின் ஆரோக்கியமே அதிக விளைச்சலுக்கான அடித்தளம். அறுவடை செய்யப்பட்ட பிறகு வயலை ஆழமாக உழுதல் மூலம் மேல் மண் மிருதுவாகி, மழைநீர் உறிஞ்சும் திறன் அதிகரிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், மண் அரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. முந்தைய பயிர்களின் சருகுகள் மற்றும் வேர்ச்சேதங்கள் மக்கி இயற்கை உரமாக மாறுகின்றன. மேலும், படைப்புழு, கூட்டுப் புழு, பூச்சி முட்டைகள் மற்றும் நோய் பரப்பும் கிருமிகள் போன்றவை சூரிய ஒளியில் அழிய வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் மண்ணின் ஈரப்பதமும், சத்தும் மேம்படுகிறது.

தகுதியானவர்கள் யார்?
இலவச கோடை உழவு திட்டத்தின் கீழ், 2 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெற தகுதியானவர்கள். சாதாரணமாக உழவு செய்யும் பணிக்கு விவசாயிகள் குறிப்பிடத்தக்க செலவு செய்ய வேண்டியிருந்தது. கவருமானம் குறைந்திருந்த ஊரடங்கு காலத்தில் இது பெரிய சுமையாக இருந்தது. அந்த சுமையை குறைக்கும் வகையில் அரசு சார்பில் டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்கள் மூலம் நேரடியாக வயல்கள் உழவு செய்யப்பட்டன. இது ஏராளமான விவசாயிகளுக்கு நிதி உதவியாக இருந்தது.
தொடர்பு கொள்ளவும்:
விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் 1800 4200 100 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து முன்பதிவு செய்யலாம். மேலும், ‘உழவன்’ செயலி மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. விண்ணப்பித்த பின், ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைப்பில் உழவுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இலவச திட்டம் தொடர்ச்சியாக செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்து விவசாயிகள் தங்களது மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: இன்பச் செய்தி! இனி ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம்..! மத்திய அரசின் புதிய ரேஷன் மாற்றுத் திட்டம்!