TN Govt Schemes: ரூ.1.20 இலட்சம் மானியம் கொடுக்கும் தமிழக அரசு.. யார் விண்ணப்பிக்கலாம்? விதிமுறைகள் என்ன?



Tamil Nadu Cow Loan Scheme 2026 ₹1.20 Lakh Subsidy Eligibility, Rules and How to Apply

விவசாய தொழிலில் நல்ல இலாபம் காணும் வகையில், கறவை மாடு வாங்க தமிழ்நாடு அரசு கடன் வழங்குகிறது.

வேளாண் தொழிலில் ஈடுபட்டு வரும் கிராம விவசாயிகளுக்கு, விவசாயத்தின் உபதொழிலாக கறவை மாடுகள் வளர்ப்பு கவனிக்கப்படுகிறது. நல்ல இலாபத்தை வழங்கும் இந்த தொழிலை பலரும் முன்னெடுத்து வருகின்றனர். மாடுகளுக்கான பண்ணை தீவனம் கிராமங்களில் எளிதில் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலில் ஆர்வம் உடையோர் இதனை முன்னெடுக்கின்றனர்.

கடன் தருவது யார்?

இவ்வாறான தொழிலாளர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 லட்சம் வரையில் கடன் தருகிறது. விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு கழகம் (TABCEDCO), தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (AAVIN) மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து கறவை மாடுகளை வாங்க கடன் வழங்குகிறது. 

இதையும் படிங்க: இ-ஸ்கூட்டர் வாங்க  ரூ.20000 தரும் அரசு.. உடனடியாக விண்ணப்பியுங்கள்.! 

இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், ஒரு கறவை மாட்டுக்கு ரூ.60,000 வீதம் 2 கறவை மாடுகளை வாங்க ரூ.1.20 இலட்சம் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன்பெற, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பயனர் உறுப்பினராக இருக்க வேண்டும். கறவை பசு அல்லது எருமை மாடுகளை பயனர் வாங்கி பலன்பெறலாம்.

Tn govt

தகுதிகள்:

* மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி சங்க உறுப்பினராக இருக்க வேண்டும்
* ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும்
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
* பயனாளியின் வயது 18 முதல் 60 க்குள் இருக்க வேண்டும்
* குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்
* 3 ஆண்டுகால தவணைக்குள் கடன் செலுத்தப்பட வேண்டும். ஆண்டுக்கு வட்டி விகிதம் 7% 

தேவையான ஆவணங்கள்:

1. வருமான சான்றிதழ்
2. சாதி சான்றிதழ்
3. பிறப்பிடச் சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை:

* ஆவின் அல்லது கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்
* https://tabcedco.net என்ற வெப்சைட் மூலம் இணையவழியிலும் பதிவு செய்யலாம்

கூடுதல் விபரங்களுக்கு: 044-28190122 / 044-28190145