இ-ஸ்கூட்டர் வாங்க  ரூ.20000 தரும் அரசு.. உடனடியாக விண்ணப்பியுங்கள்.! 



subsidy for e scooter who works as gig employee

ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி தொழில் செய்யும் நபர்கள் போன்றோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், மின் வாகனங்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ் 2000 பயனாளர்களுக்கு புதிய ஸ்கூட்டர் வாங்க ரூ.20000 மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு தரப்பில் இருந்து மொத்தம் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 50000 தொழிலாளர்களுக்கு இதனுடன் ஒற்றுமை காப்பீடு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

E Scooter

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு GIG தொழிலாளராக இருக்க வேண்டும். முறைப்படி, தமிழக தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் பயன்பெற அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.

இதையும் படிங்க: "தள்ளிப்படுக்க எதுக்குடா கல்யாணம்?" கணவரை ஆள் வைத்து அடித்த மனைவி.. கணவன் அதிர்ச்சி முடிவு.!

தகுதியுள்ளவர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது பற்றி முழு தகவல்களை பெற அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்று முழு விவரங்களை பெற்ற பின்னர் விண்ணப்பிக்கலாம்.