#BREAKING: பட்டு வேஷ்டி சட்டையில் தலைமை செயலகம் வந்த முதல்வர் விஜய்.. முதல் முறையாக.. இன்ப அதிர்ச்சியில் தவெகவினர் துள்ளல் கொண்டாட்டம்.!
அலுவல் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதல்வராக விஜய் முதல் முறையாக பட்டு ஆடையில் வருகை தந்துள்ளார்.
கோட்-சூட் உடை:
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோட்-சூட் உடையுடன் அரசு பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறார். விஜய்க்கு முன்னதாக பலரும் முதல்வராக பொறுப்பேற்று இருந்தாலும், கோட்-சூட் உடையுடன் வருகை தந்தது புதிய அரசியல் பயணத்துக்கான அடித்தளமாக கவனம் பெற்றது.
இதையும் படிங்க: கடவுளே... காப்பாத்து! எத்தன்னை தடைகள் வந்தாலும் என் தலைவன் முதல்வர் ஆகணும்.! விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத தவெக தொண்டரின் வீடியோ!!!
#JustNow || விஜயின் மேலாளர் ஜெகதீஷ் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் பட்டு வேட்டி சட்டையில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்#CMVijay | #PolimerNews pic.twitter.com/qp6JVNexia
— Polimer News (@polimernews) May 29, 2026
பட்டு-வேஷ்டியில் வருகை:
இந்நிலையில், இன்று தமிழ்நாடு முதல்வராக விஜய் பட்டு வேஷ்டி-சட்டையில் தலைமை செயலகத்துக்கு அலுவல் பணிகளை கவனிக்க வந்தார். முன்னதாக, காலையில் விஜயின் மேலாளர் ஜெகதீசன் புதுமனை புகுவிழாவில் பட்டு வேஷ்டி-சட்டையில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, இன்று முதல் முறையாக பட்டு வேஷ்டி-சட்டையில் முதல்வர் விஜய் வந்துள்ளார்.
இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக சட்டச்சபையில் பதவியேற்க வந்த தவெக எம்.எல்.ஏ பல்லவி ! பாராட்டுக்கள் பல பல..... கோட்டையே நெகிழ்ந்த அரசியல் காட்சி...!!!