சிறுமியை வீட்டு வேலைக்கு வைத்து கொடுமை படுத்தும் பிரபல தமிழ் நடிகை; தாயார் பரபரப்பு புகார்.!

சிறுமியை வீட்டு வேலைக்கு வைத்து கொடுமை படுத்தும் பிரபல தமிழ் நடிகை; தாயார் பரபரப்பு புகார்.!


tamil-cinima---banupriya---child-labour---chennai

தனது 14 வயதேயான மகளை நடிகை பானுப்பிரியா, அவரது வீட்டு வேலைக்கு வைத்து சம்பளம் கொடுக்காமல் அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் தனது குழந்தையை பார்க்க விடாமல் தடுக்கிறார் என்றும் அந்த குழந்தையின் தாயார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 1990களின் மத்தியில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. இவர் நடிகர் விஜயகாந்த், சத்தியராஜ், பாக்கியராஜ், கார்த்திக், அர்ஜுன் உள்ளிட்ட பல முக்கிய திரை நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர். தற்சமயம் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருக்கிறார். எனினும், அம்மா, அக்கா போன்ற சிறப்பு தோற்றங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.

tamil cinima

இந்நிலையில் 14 வயதான தனது மகளை நடிகை பானுப்பிரியா குழந்தைத் தொழிலாளியாக அவரது வீட்டில் வைத்துள்ளார் என்று பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த புகாரில், 14 வயது மகளை நடிகை பானுப்ரியா சென்னையில் உள்ள தன் வீட்டில் குழந்தைத் தொழிலாளியாக வைத்திருக்கிறார். சம்பளம்கூட கொடுப்பதில்லை. அது மட்டுமின்றி குழந்தையை அடித்துக் கொடுமைப்படுத்தி வருகிறார்." என்று தெரிவித்துள்ளார். 

மேலும், தன் குழந்தையைப் பார்க்கச் சென்றபோது பார்க்கவிடாமல் தடுத்து விரட்டி விட்டதாகவும் அந்தப் பெண் கூறியிருக்கிறார். இந்த புகாரானது ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள சமால்கோட் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.