தமிழகம்

பச்சிளம் குழந்தைகள் என்று கூட பாராமல் உணவில் விஷம் வைத்து கொன்ற தந்தை! இது தான் காரணமா?

Summary:

Suside

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகிலுள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் - இந்துமதி தம்பதியினர். இவர்களுக்கு சுனில்(13) மற்றும் விமல்(9) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இந்துமதி சில தினங்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்துள்ளார்.

இதனால் மன அழுத்தம் மற்றும் துக்கத்தில் இருந்த சுந்தர் மதுவிற்கு அடிமையாகி தினமும் குடித்து வந்துள்ளார். ஒரு நாள் தனது இரண்டு மகன்களுக்கும் இரவு உணவு சாப்பிடும் போது அதில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு தானும் மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார்.

காலையில் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தந்தை மற்றும் இரண்டு மகன்களும் இறந்து கிடந்ததை பார்த்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர்.

அதனை அடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனுப்பியுள்ளனர். ஒரே ராத்திரியில் தந்தை எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement