தமிழகம்

சென்னையில் சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கி சூறையாடிய பாஜகவினர்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து சரமாரியாகத் தாக்கிய பாஜகவை சேர்ந்தவர்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட் இயங்கி வரும் உரிமையாளருக்கும், கடையை நடத்திவருபவருக்கும் வாடகை தொடர்பாக தகராறு ஏற்பட்டு, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் கடையின் ஊழியர்கள் வந்து கடையை திறந்த கொஞ்ச நேரத்தில் திடீரென ஒரு கும்பல் கடைக்குள் நுழைந்து சுத்தியல், ஸ்பேனர் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை  நொறுக்கி, பின்னர் கடையி; இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாட தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவர்களில் சிலரை சுற்றி மடக்கிப் பிடித்தனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த கடை ஊழியர் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்‌கப்பட்டார். விசாரணையில் தாக்குதல் நடத்தியவர்கள், 10-க்கும் மேற்பட்ட பாஜகவின் ஊடகப்பிரிவு, கலை இலக்கிய பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement