தமிழகம்

பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை! சிறுவர்கள் எடுத்த அதிரடி முடிவால் சோகத்தில் தவிக்கும் பெற்றோர்!

Summary:

Students erodu

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மவுலி, தருண்ஸ்ரீ, மிதுன் ரித்தீஷ், விஜய் ஆகிய நான்கு மாணவர்கள் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பாததால் அதிர்ச்சியான சிறுவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவர்களை தேடும் பணியில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையாக சிறுவர்களின் உடன் பயலும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த நான்கு சிறுவர்களும் தங்களது படிப்புக்கு அதிகம் பணம் தேவை படுவதால் அவர்களது பெற்றோர் மிகவும் கஷ்டப்படுவதாக பைசியுள்ளனர்.

மேலும் தங்களது பெற்றோருக்கு நாம் பாரமாக இருக்க கூடாது என்றும் பேசியதாக மாணவர்கள் தெரிவித்ததை அடுத்து போலீசார் அனைத்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை அடுத்து விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே நான்கு மாணவர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement