குடல் அழுகி, வெளியே வந்த ஒரு லிட்டர் அழுகிய இரத்தம்..! துடிதுடித்த சிறுவன்! மருத்துவர்கள் செய்த அபார சாதனை..!

குடல் அழுகி, வெளியே வந்த ஒரு லிட்டர் அழுகிய இரத்தம்..! துடிதுடித்த சிறுவன்! மருத்துவர்கள் செய்த அபார சாதனை..!


stomach-issue-for-young-boy

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த 12 வயது சிறுவன் வயிற்று வலியால் துடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். உடல் நிலை மோசம் அடைந்ததால், பட்டுக்கோட்டை யில் இருந்து தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

 மருத்துவமனையில் மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்ததில், சிறுவனுக்கு வயிறு வீங்கி இருந்தது , இதய துடிப்பு மிக அதிகமாக இருந்தது , மேலும் நீர் சத்து குறைந்து ஆபத்தான நிலையில் இருந்துள்ளான்.

 இதனையடுத்து சிறுவனுக்கு ஸ்கேன் எடுத்ததில் குடல் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு தயார் செய்தோம். 

govt hospital

 சிறுவனுக்கு செய்த அறுவை சிகிச்சையில், வயிற்றை கிழித்தவுடன் சுமார் 1 லிட்டர் அழுகிய ரத்தம் வெளியே வந்தது. பின்னர் குடல் அழுகி இருப்பதை கண்டுபிடித்தனர்.

 சிறுவனின் சிறு குடல் கிட்டத்தட்ட 100 சென்டி மீட்டர் அழுகி இருந்தது. அழுகிய குடலை வெட்டி எடுத்து விட்டு, சிறு குடலையும் பெரு குடலையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிறுவனின் குடல் அழுக காரணம், ரத்த ஓட்டம் தடைபட்டு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

 அறுவை சிகிச்சைக்குப் பிறகு 6 வது நாளுக்கு பிறகு தண்ணீரும், இளநீரும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சிறு குடல் 80 சதவீதம் இல்லாததால் , வயிற்று போக்கு ஏற்பட்டு மிக சிரமம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து 9 ஆம் நாள் இட்லி , சாதம் கொடுத்துள்ளனர்.

govt hospital

11 நாட்கள் கழித்து யாரும் எதிர்பார்க்காதது  நடந்தது. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து தையல் போட்ட தொப்புள் பகுதியில் இருந்து மலம் வர ஆரம்பித்தது. குடிலுக்குள் தையல் பிரிந்ததை உணர்ந்த மருத்துவர்கள் சத்து மருந்து , மற்றும் உணவில் உள்ள சத்துக்கள் கலந்த விசேஷ நரம்பு மருந்துகள் செலுத்தியதில், தொப்புள் அருகே வந்த மலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பின்னர் உடல் நன்கு தேறியது. 

இதுகுறித்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பிரகாஷ் ராஜேந்திரன் கூறுகையில், இந்த சிகிச்சை சிறுவனுக்கு மறுபிறவி போன்றது. கிட்டத்தட்ட 25 நாட்கள் எங்கள் வார்டில் இருந்துள்ளான். இவர்களுக்கு ஒரு ருபாய் கூட செலவு இல்லை. எங்கள் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் மிகவும் நன்றாக கவனமெடுத்து சிறுவனை கவனித்து வந்தனர்.

இந்த அறுவை சிகிச்சை மற்றும் கவனிப்பின் மதிப்பு தனியார் மருத்துவமனையில் 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகியிருக்கும். அரசு மருத்துவமனை என்பதால் முற்றிலும் இலவசம். இது போல அரசு மருத்துவமனையில் பல உயிர்கள் வருடம் முழுவதும் காப்பாற்றப்படுகிறது எனக் கூறினார்.