திமுக தலைவர் ஸ்டாலினை துயரத்தில் ஆழ்த்திய அமைச்சரின் மறைவு.! மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உருக்கமான பதிவு.!

திமுக தலைவர் ஸ்டாலினை துயரத்தில் ஆழ்த்திய அமைச்சரின் மறைவு.! மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உருக்கமான பதிவு.!


stalin talk about minister death

தமிழக வேளாண் அமைச்சர் துரைகண்ணு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சைபலனின்றி நேற்றிரவு சென்னையில் காலமானார்.  அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

இந்தநிலையில், இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அங்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் திரு உருவப் படத்துக்கு மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு செய்தியை கேட்டு தான் துயருற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "வேளாண்துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்! பொதுவாழ்வில் உள்ள அனைவரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்திட வேண்டும். அமைச்சரை இழந்து வாடும் குடும்பத்தினர், சக அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதல்" என பதிவிட்டுள்ளார்.