அரசியல் தமிழகம்

14 மாவட்டங்கள்!! 22 அமைச்சர்கள்!! கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு!!

Summary:

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 22 அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 22 அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை (மே 10 2021) முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று முதல்வர் தலைமையில் 33 அமைச்சர்களுடன் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் 6 முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 22 அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, "தமிழகத்தில் #COVID19 தொற்று அதிகம் உள்ள 14 மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி- ஊரடங்கைக் கண்காணித்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் - சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள ஏதுவாக அமைச்சர்கள் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்." என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement