தமிழகம் சினிமா

பாடகர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் தற்போதைய நிலவரம்! குவிக்கப்பட்ட ஏராளமான போலீசார்.!

Summary:

spb admitted hospital protected by police force

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த மாதம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடந்து அவரது உடல்நிலை மோசமான நிலையில் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து நாளடைவில் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் நேற்று திடீரென பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை  மோசமாகி மிகவும் கவலைக்கிடமாக இந்தநிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அதிகபட்ச உயிர்காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பான தகவல் வெளிவந்ததும் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு பிரபலங்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் மருத்துவனை முற்றிலும் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. சினிமா பிரபலங்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். எஸ்.பி.பி அவர்களின் மகள், மகன், மனைவி உள்ளிட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனையில் ஏரளமான மக்கள் கூட்டங்கள் இருப்பதால் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement