எக்ஸ்பிரஸ் இரயில்களில் அன் ரிசர்வ் பெட்டிகள் இணைப்பு - தென்னக இரயில்வே.!

எக்ஸ்பிரஸ் இரயில்களில் அன் ரிசர்வ் பெட்டிகள் இணைப்பு - தென்னக இரயில்வே.!


Southern Railway Announce Some Express Train Un Reserve Coach Joined Form 1 Jan 2022

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, வழிகாட்டுதல் நெறிமுறைகளின் பேரில் இரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இரத்து செய்யப்பட்டன. இந்த பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், மீண்டும் இரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஜனவரி 1 ஆம் தேதியான நாளை முதல் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில்களில் 2 முன்பதிவில்லாத பெட்டிகள் பயன்பாட்டில் கொண்டு வரப்படுகிறது.

Southern Railway

அதனைப்போல, மங்களூர் - நாகர்கோவில், நாகர்கோவில் - மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது. மங்களூர் சென்ட்ரல் - நாகர்கோவில், நாகர்கோவில் - மங்களூர் சென்ட்ரல் இரயிலிலும், நாகர்கோவில் - கோட்டயம் இரயிலிலும், நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் ஜனவரி 1 முதல் இணைக்கப்படவுள்ளது. 

மேற்கூறிய இரயிலில் பயணம் செய்ய விரும்பும் நபர்கள் அந்தந்த இரயில்களுக்கு ஏற்றாற்போல ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்தோ அல்லது ஜனவரி 4 ஆம் தேதியில் இருந்தோ முன்பதிவில்லாத இரயில் டிக்கெட் வாங்கி பயணம் மேற்கொள்ளலாம்.